பாடசாலை மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி மேக்டலின் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அலேனிஸ் பினியன் (வயது 24). இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் செட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஆசிரியை ஒரு மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி குறித்த ஆசிரியையை கைது செய்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆசிரியை அலேனிஸ் பினியன் ஒப்பந்த அடிப்படையில் தங்கள் பாடசாலையில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பையே முதன்மையாக கருதுவதாக பாடசாலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்