பாடசாலை புத்தக பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை
பாடசாலை புத்தக பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.
டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வழங்குமாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்துக்கு இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டார்.
விலை குறையவில்லை என்றால் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்