பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் தீர்மானம்

பாடசாலை செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான தகவல் கட்டமைப்பொன்றை பேணுமாறு சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்திற்கு கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த தகவல்களை கல்வி அமைச்சுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என கோபா குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

2019, 2020, 2021 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தது.