பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு

மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி நடுப்பகுதியில் தொடங்க உள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களின் தேவை அதிகரிக்கும். குறித்த தேவையை பூர்த்திசெய்ய உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே தயாராகி வருகின்ற நிலையில் எரிபொருள் விலையேற்றம் பாரிய நட்டத்தை தமக்கு ஏற்படுத்தும் என குறித்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதால் விலையை அதிகரிக்காமல் நிறுவனங்களை நடத்த முடியாதுள்ளதாகவும் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்