பாடசாலையில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் மரணம்

கண்டியில் மரம் சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி பகுதியை சேர்ந்த 5 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலையிலேயே இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.