பாடசாலையில் மயங்கிய மாணவர்கள்: ஒருவரின் நிலை கவலைக்கிடம்

குருணாகல் பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை மரத்தடியில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு மாணவர்களும் மரத்தடியிலிருந்து ஏதோ மாத்திரைகளை உட்கொண்டதாக அங்கிருந்த எனைய மாணவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு மாத்திரைகளை யாராவது கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.