பாடசாலையில் பெண் பாலியல் வன்புனர்வு: அதிபர் கைது

மொனராகலை பகுதியில் பெண்ணை பாலியல் வன்புணர்வு உட்படுத்திய குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை கலபெத்த மகா வித்தியாலயத்தின் 53 வயதுடைய அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 28 ஆம் திகதி உணவகத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் பாடசாலை ஆசிரியை ஒருவர் வந்து, சிற்றுண்டிச்சாலையில் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து உரிமையாளரான பெண், மாலை 3.40 மணியளவில் பாடசாலைக்கு விளக்குகளை அணைக்கச் சென்றுள்ளார். விளக்குகளை அனைத்துவிட்டு வீடு திரும்ப இருந்தபோது, ​​தலைமை ஆசிரியர் அவரை அலுவலகத்திற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த அதிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தொம்பகஹவெல பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.