பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்

வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து நேற்று திங்கட்கிழமை மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.