பாடசாலையின் 73 வருட வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை தாண்டி சாதனை!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில், இருநூறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி, வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 135 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த பாடசாலை ஆரம்பித்து 73 வருட வரலாற்றில், வெட்டுப்புள்ளியை தாண்டிய முதல் மாணவி என்ற பெருமையை இம்மாணவி பெற்றுள்ளார்.
அத்தோடு பரீட்சை எழுதிய ஏனைய மாணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்
மிகவும் பின்தங்கிய பொருளாதார நெருக்கடி உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையின், அதிபர் கு.பிரபாகரன், மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் திரு இ.பிரபாரெத்தினம் ஆகியோரை பாடசாலை சமூகம் பாராட்டி கௌரவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

