பாடசாலை,பல்கலைக்கழக மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் பருவகால(சீசன்) டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும்

பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பருவப் பயணச் (சீசன்) டிக்கெட்டில் பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பருவப் பயணச் சீட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பருவப் பயணச் சீட்டுகள் செல்லுபடியாகும் மாதத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி விடுமுறை நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளில் பயணிப்பதற்கு பருவச் சீட்டுகளைக் கொண்ட மாணவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.