
பாடசாலைக்கு தீ வைத்த 7, 12 வயது மாணவர்கள் கைது
பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக CCTV காட்சிகளில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாடசாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் விபரங்கள் இன்னும் கண்டறியப்ப டவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று புதன்கிழமை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
