பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை: ஒருவர் கைது!
பாதுக்க நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் உள்ள வாடகை வீடொன்றில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் பொலிஸ் விஷேட பிரிவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 1 கிலோ 170 கிராம் கஞ்சா மற்றும் நூறு போதை மாத்திரைகளுடன் இன்று ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்க மில்லவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர் ஹோமாகம, இங்கிரிய, பாதுக்க, அதுரகிரிய, ஹொரண, முதலான இடங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததுடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல தடவைகள் சிறைச்சாலையில் இருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்