
பாடசாலைக்குச் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி
நுவரெலியா தினியாவல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் தங்க நகையை பறிக்க முற்பட்ட திருடர்களிடமிருந்து ஆசிரியை தப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்ட போது ஆசிரியர் அவரது நகையை கையில் எடுத்து கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், ஆசிரியர் சமயோசிதமாக செயற்பாட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.
