பாடசாலைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளையும் கடந்த வாரம் நடத்தப்பட்டதைப் போன்று ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று சனிக்கிழமை கல்வி அமைச்சருடன் கல்வி மற்றும் பாடசாலை அதிகாரிகளால் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரதி/உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களும் முன்னர் ஒதுக்கப்பட்ட அதிகாரத்தின்படி பாடசாலைகளில் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
பாடசாலைகள் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 03 நாட்கள் மட்டுமே நடைபெறும்.
அத்துடன் போக்குவரத்துச் சிரமங்கள் இல்லாத பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடனும் பிராந்தியக் கல்விப் பணிப்பாளரின் ஒப்புதலுடனும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
