பாடசாலைகளுக்கு விளையாட்டுப்பொருட்கள் வழங்கி வைப்பு
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை சகல வாய்ப்புக்களையும் சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சிறுவர் குழுக்கள் அல்லது கழகங்கள் தாபிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறுவர் குழுக்கள், கழகங்களை மீளமைத்தல் மற்றும் மாணவர்களுக்கான விஷேட விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
மகிழ்ச்சிகரமான சிறுவர் கழங்களை உருவாக்கி அவற்றின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் வகையில் சிறுவர் கழக உறுப்பினர்கள் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. பி. யஷோதாவின் ஒருங்கிணைப்பில் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்