பாடசாலைகளுக்கு விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவத்தை முன்னிட்டு ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 04ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 03 ஆம் திகதி மாபெரும் ஊர்வலத்தின் மறுநாள் மாணிக்க கங்கையில் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடையும். ஊர்வல விழா விசேட கடமைகளுக்காக வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக மூன்று பாடசாலைகளின் கட்டடங்களை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.

அதன் பிரகாரம் கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் மஹா வித்தியாலயம் மற்றும் தெட்டகமுவ வித்தியாலயம் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தனமல்வில பிராந்திய கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்