
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா
-மன்னார் நிருபர்-
திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை அதிகாலை 02.00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களாக இச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக்
கடந்துள்ளார்.
இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்ரல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.
இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளையாட்டு வரலாற்றிலே தனது பெயரை பதிந்து கொள்வதற்காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில்
வெற்றியாளராக தெரிவாகி இருக்கின்றார்.
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
