
பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தியுள்ளன
இந்திய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் , இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீர் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.