பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை – போட்டி அட்டவணை வெளியானது

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.

குறித்த போட்டிகள் நவம்பர் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து நவம்பர் 17 ஆம் திகதி இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள்
மோதவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகள் நவம்பர் 17 முதல் 29 ஆம் திகதி வரை டி20 வடிவில் இடம்பெறவுள்ளது.

முழுமையான விபரம் கீழே

பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

நவம்பர் 11 – (முதல் ஒருநாள் போட்டி) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்

நவம்பர் 13 – ( இரண்டாவது ஒருநாள் போட்டி) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்

நவம்பர் 15 – (மூன்றாவது ஒருநாள் போட்டி) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்

முத்தரப்பு டி20 தொடர்

நவம்பர் 17 – பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் (ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்)

நவம்பர் 19 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் (ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்)

நவம்பர் 22 – பாகிஸ்தான் vs இலங்கை (கடாபி மைதானம்)

நவம்பர் 23 – பாகிஸ்தான் vsஆப்கானிஸ்தான் (கடாபி மைதானம்)

நவம்பர் 25 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் (கடாபி மைதானம்)

நவம்பர் 27 – பாகிஸ்தான் vs இலங்கை (கடாபி மைதானம்)

நவம்பர் 29 – இறுதிப் போட்டி (கடாபி மைதானம்)