பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் – ஹர்பஜன் சிங்
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடருக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் , , பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி ‘எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?. இது மிகவும் சாதாரண விடயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. நமது இராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை.எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது. இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விடயம். தேசமே எப்போதும் முதன்மையானது’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.