பாகிஸ்தானில் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளை அழிக்க அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மற்றும் பனு மாவட்டங்களில் தெஹ்ரி இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்அடிப்படையில் இரு மாவட்டங்களில் பாதுகாப்புப்படையினரும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்தநிலையில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் லக்கி மாவட்டத்தில் 14 பயங்கரவாதிகள், பனு மாவட்டத்தில் 17 பயங்கரவாதிகள் என மொத்தம் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.