
பாகிஸ்தானில் தொடரும் அவலம் – 802 பேர் பலி
பாகிஸ்தானில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் நீர்நிலைகள் நிரம்பி அவ்வப்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தினால் தற்போது 802 பேர் பலியானதாகவும், 1,088 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 479 பேர் பலியானதுடன், 347 பேர் படுகாயமடைந்தது உறுதியாகியுள்ளது.
