பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

🥒பாகற்காய் என்று சொன்னாலே எல்லோருக்கும் கொஞ்சம் கேட்கவே கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் பாகற்காயில் ஏராளமாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. பாகற்காய் கொண்டு விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ருசியில் கசப்பாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இந்த பாகற்காய்க்கு உண்டு. பாகற்காய் ஆனது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இதன் நன்மைகள் இருந்தபோதிலும், பாகற்காய் சில உணவுகளுடன் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. அந்தவகையில் அது என்னென்ன உணவுகள் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இனிப்பு பழங்கள்

🍀வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் போன்ற பழங்களில் அதிக சர்க்கரை உள்ளது. பாகற்காயில் கசப்பான தன்மை கொண்டது. இனிப்பும் கசப்பும் வெவ்வேறு சுவைகள். அதனால் தான் பாகற்காயில் செய்யப்படும் உணவுகளை, இந்த பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், பழத்தின் சுவை கெடும். மேலும், செரிமானக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் சாப்பிடவே கூடாது.

பால் பொருட்கள்

🍀பாகற்காயுடன் பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. பால், தயிர், பாலாடைக்கட்டி ஆகியவற்றுடன் கலந்து சாப்பிட்டால், அவற்றின் தன்மை மற்றும் சுவை பாதிக்கப்படும். இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது அஜீரணக் கோளாறை உண்டாக்கும். ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அது வயிற்று வலி,வயிறு எரிச்சல், மலச்சிக்கல் உள்ளிடட பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.

ஆட்டிறைச்சி

🍀பாகற்காயை ஆட்டிறைச்சி போன்ற இறைச்சிகளுடன் சமைக்கக் கூடாது, ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது, உணவின் சுவை கெட்டுவிடும். மேலும், இந்த கலவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வறுத்த உணவுகள்

🍀வறுத்த கோழி மற்றும் பிற வறுத்த உணவுகளுடன் பாகற்காயை சேர்க்க கூடாது. இரண்டு உணவுகளும் சேரும்போது வறுத்த உணவுகளின் சுவை கெட்டுவிடும்.

ஆசிட் உணவுகள்

🍀தக்காளி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அசிடிட்டி அதிகமாகி உள்ளது. இவற்றை பாகற்காயுடன் கலக்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள அசிடிட்டி பாகற்காயின் கசப்பை அதிகரிக்கிறது. இது உணவின் சுவையை மாற்றும்.

மசாலாப் பொருட்கள்

🍀கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற வலுவான மசாலாப் பொருட்களை பாகற்காய் உணவுகளில் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், இந்த மசாலாப் பொருட்களின் காரமான தன்மை அவற்றின் இயற்கையான சுவையை மாற்றுகிறது. மேலும், செய்முறையின் சுவையையும் கெடுத்துவிடும். ஆனால் சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற லேசான மசாலாவை இந்த உணவுகளில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தலாம்.

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்