
பஸ் விபத்து: 8 பேர் படுகாயம்
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சுற்றுலாவுக்குச் சென்றவர்களில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
