
பஸ் விபத்து: 15 பேர் படுகாயம்
உடுகாவ பிரதேசத்தில் அக்குரஸ்ஸ வெலிகம பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து வெலிபிட்டிய நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளானதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
