பஸ் விபத்து – பெண் ஒருவர் பலி

கம்பளை கண்டி பிரதான வீதியில் கெலிஓயா சரமட விகாரைக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடைமீது மோதியுள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.