
பஸ் விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு
மகேலி எல்ல பிரதேசத்தில் நேற்று காலை 9.40 மணியளவில் பாலிந்தநுவரயிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலிந்தநுவர கெலின்கந்த பிரதேசத்தில் வசித்து வந்த டில்ஷான் மதுரங்க என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் சிக்கிய பஸ் சாரதி உட்பட 10 பேர் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
