பஸ் கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு

டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் பஸ் கட்டணத்தை திருத்தம் செய்ய முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதேவேளைm எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்திருந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து,  ஐஓசி மற்றும் சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்தன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்