பவள பாறைகளை பாதுகாக்க புதிய திட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை,குச்சவெளி கடல் பகுதிகளில் பவள பாறைகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுலாதுறையை மேம்படுத்தல் தொடர்பக IUCN அமைப்பின் அனுசரணையில் “Sri Lanka Coral Reef Initiative” எனும் தொனிப்பொருளில் இரண்டு நாள் புதன் மற்றும் நேற்று வியாழக்கிழமைகளி இரண்டு நாள் கருத்தரங்கு திருகோணமலை சர்வோதயத்தில் இடம்பெற்றது.

இதில் கரடிமலை மற்றும் சல்லிமுனை போன்ற இடங்கள் முக்கிய சுற்றுலா தளங்களாக அடையாளப்படுத்தப்பட்டத்துடன் இந்த இடங்கள் பற்றிய பூரண விளக்கமும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு கடல்சார் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பது பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதில் கரேயோர மூலவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.