பழைய வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் விசேட சலுகை!

உற்பத்தியாளரால் பின்வரிசை நடுவிலுள்ள இருக்கைக்கோ அல்லது ஏனைய பின் இருக்கைகளுக்கோ பாதுகாப்புப் பட்டிகள் (Seat belts) பொருத்தப்படாத வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை மூன்று மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.

இதன் மூலம் 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலை) ஒழுங்குவிதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.