பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டம்
2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகளுக்கு அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் தலைமையில் அண்மையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான ரம்பக்கென் ஓயா பிரிவின் முகாமைத்துவ மத்திய நிலையத்தில இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.