பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளமையால் கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்