பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்போன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த வெற்றிவேல் எனும் மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவன் கடந்த சில தினங்களாகவே தனது பெற்றோரிடம் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு கைபேசி வாங்கித் தருமாறு வற்புறுத்தி உள்ளார். பெற்றோர் வாங்கித்தர மறுத்ததால் மனமுடைந்த மாணவன் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்