
பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி!
ஓமான் தலைநகர் மஸ்கட்டுக்கு அருகிலுள்ள வாடி கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாக அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரப் பிரார்த்தனைக்காகப் பலர் கூடியிருந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு துப்பாக்கிதாரி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக ஓமான் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்துஇ தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தொடர்பான விபரங்கள் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
