பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: பெண்ணின் பரிதாபம்

-பதுளை நிருபர்-

பதுளை – மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 22 பயணிகள் மீகஹகிவுல வைத்தியசாலையிலும், 4 பயணிகள் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து பெண்ணின் பரிதாபம்