பளையில் கைக்குண்டு மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாலை குறித்த கைக்குண்டு கள்ளு தவறணைக்கு அருகாமையில் காணப்பட்டதையடுத்து‌, பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின் குறித்த கைக்குண்டினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த கைக்குண்டு யுத்தகாலத்தில் பாவிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அது செயழிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.