பளையில் தொடர் சுற்றிவளைப்பில் உழவு இயந்திங்களுடன் நால்வர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

பளையில் இரண்டு நாள் தொடர் சுற்றிவளைப்பில், 4 உழவு இயந்திங்களுடன், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்று வந்திருந்தது. இதனால் வேம்போடுகேணி கிராம மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கடந்த 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றி வளைப்பின் போது, 4 உழவு இயந்திரங்கள் மற்றும் 4 சந்தேக நபர்களும் சட்டவிரோத மண் ஏற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எதிர்வரும் புதன்கிழமை அன்று 4 உழவு இயந்திரங்களும், கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.