பல வீடுகளில் திருடிய மூவர் கைது

பல வீடுகளில் பல்வேறு பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும், 4ம் கட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 03 மோட்டர்கள், 08 சிலிண்டர்கள், ஜெனரேற்றர், தொலைக்காட்சி, கிறண்டர், சைக்கிள், மோட்டர் சைக்கிள் மற்றும்  2 பவுண் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.