பல மாகாணங்களில் கடும் வெப்பம்: மக்கள் அவதானம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான வெப்ப சுட்டெண் அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, மேற்கூறிய பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை நிலை அறிக்கையின் படி அதிக வெப்பநிலை உணரப்படுவதோடு அதிக சோர்வு ஏற்படும் எனவும், அதே சமயம் தொடர்ச்சியான செயல்பாடு காரணமாக உடல் நிலை பாதிக்கும் சாத்தியம் உள்ளதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.