பல பெண்களுடன் தொடர்புடைய ஆண்
பொதுவாக ஆண்கள் செய்யும் தவறுகள், பெண்கள் செய்யும் தவறுகள் என்று சமுதாயத்தில் பல விதமான பாகுபாடு உண்டு. குறிப்பாக, ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆணுடன் பாலியல் ரீதியாக அல்லது நெருக்கமான உறவு வைத்திருந்தால், அப்பெண்ணை இழிவு படுத்தும் வகையில் பல பெயர்கள் இந்த சமூகத்தில் உள்ளன. ஆனால் ஆண்கள் அவ்வாறு இருந்தால் அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பது பரவலான கருத்து. குறிப்பாக, இதை பிளே பாய் என்று விளையாட்டாக, எடுத்துக் கொள்ளும் சூழல் இருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது போல இருக்கும் ஆண்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே ஒரு கட்டுக்கதை என்பது நிரூபணமாகியுள்ளது.
பல பெண்களுடன் பாலியல் தொடர்பில் இருக்கும் ஆணை இந்த சமூகம் வெறுக்கிறது. பெண்களை விட கடுமையாக கண்காணிப்பு செய்யப்படுகிறார்கள்இ இத்தகைய ஆண்கள் மேல் அதிக வெறுப்பும் இருக்கிறது.
அதாவது பெண்களுக்கு என்று வரும் போது ஒரு விதமான கண்ணோட்டத்தையும், ஆண்களுக்கு வேறு விதமான கண்ணோட்டத்தையும் காணவில்லை என்று குறிப்பிடுகின்றனர். அதே போல, ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் நடத்தைகள் பற்றிய கேள்விக்கு, சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விட தனிப்பட்ட முறையில் கொஞ்சம் தளர்வாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
900 ஹெட்ரோ பாலியல் (எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்) ஆண்கள் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு நபரின் பாலியலில் அடிப்படையில், வேறொருவருக்கு எவ்வாறு பார்ட்னரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி கேள்விக்கப்பட்டது. அதில், எத்தனை நபர்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்கள் என்ற எண்ணிக்கை, கட்டுப்படுத்தும் நடத்தை, ஆதிக்கம் செலுத்தும் குணம், சுய இன்பம் காணுதல், பொறாமை, நம்பிக்கையின்மை, உறவில் ஏமாற்றுதல் உள்ளிட்ட பலவிதமான பகுதிகள் இருந்தன.
தங்கள் பார்ட்னர்களை இன்னொரு நபருக்கு எந்த அளவுக்கு பரிந்துரைப்பார்கள் என்று கேட்கப்பட்ட கேள்வியில் ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல்இ நீண்ட கால உறவுகளில் இருந்தால், அவர்கள் மிகவும் கடுமையாக கண்காணிப்பு செய்யப்படுவார்கள் என்பதை இந்த ஆய்வின் வழியாக வெளிப்படுத்தினார்கள்.
அதே போல, தொடர்ச்சியாக சுயஇன்பத்தில் ஈடுபடும் பெண்களை விட, ஆண்கள் அதிக அளவு எதிர்மறையான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, இந்த ஆய்வின் ஆசிரியரான ஆண்ட்ரூ தாமஸ் ‘பெண்கள் சுயஇன்பம் செய்வதை கட்டுப்படுத்தாமல் அல்லது கண்டிக்காமல், ஆண்கள் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறார்கள்’ என்று கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்