பல கோடி பெறுமதியான தங்கம்: சிக்கிய பெண்

விமான நிலையத்திலிருந்து 58 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தை சுத்தம் செய்யும் வெயாங்கொடை – மிரிதியலந்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் கழிவறை ஒன்றில் வைத்து சந்தேக நபருக்கு மற்றுமொரு பெண்ணினால் நகைகள் அடங்கிய பொதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நபரிடம் கொடுத்தன் பின்னர் அறுபதாயிரம் ரூபாவை தருவதாக உறுதியளித்தமையால் தான் இந்த பொதியை பெற்று வந்ததாக கைது செய்யப்பட்ட பெண் சுங்கம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண் ஊழியரை கைது செய்து  தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.