பல கொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு

அங்கொட பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷானின் படுகொலை உட்பட பல கொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் துவான் என்ற ஷிரார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது அவர் கல்குவாரி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.