பல் கூச்சம் காரணம்
🟩பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும்.
🟩பல் கூச்சத்திற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும். இந்த கூழ், பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு, புளிப்பு போன்ற உணர்ச்சிகள் பல மடங்காக பெருகுவதே மக்கள் திடீரென வலியை வெளிப்படுத்துவதற்கான காரணம். அந்தவகையில் பல் கூச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இப் பதிவில் பார்க்கலாம்.
📌சந்தைகளில் கிடைக்கும் மௌத் வாஷ் உங்களை ப்ரெஷ் ஆக வைத்திருக்கும். ஆனால் அதில் உள்ள அமில உள்ளடக்கங்கள் பற்களில் உள்ள எனாமலை பலவீனமடைய செய்யும். இதன் மூலம் பல் கூச்சம் ஏற்படலாம்.
📌பிளேக் அளவிடுதல் மற்றும் பல் மீண்டும் பொருத்துதல் போன்ற சிகிச்சைகளுக்குப் பின் சில நாட்களிலேயே பற்களில் ஒரு உணர்ச்சி தோன்றும். மேலும் இது பல் கூச்சத்திற்கு இட்டுச் செல்லும்.
📌மக்களில் சிலர் பற்களைக் கடிப்பதை வழக்கமாகவோ அல்லது அறியாமலோ கொண்டிருப்பார். இந்த நிலை ப்ரூக்சிசம் என்று அறியப்படுகிறது. இதுவும் பற்களில் உள்ள கடினமான எனாமல் பகுதியை இழக்கச் செய்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்.
📌பற்களின் மேலே உள்ள இடைவெளியானது பாக்டீரியாக்களை உள்ளே செல்ல அனுமதிப்பதுடன், அவை வாயின் உள்ளே சென்று பற்களில் தொற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்காத போது, இதுவே பெரிய தலை வலியாக மாறும். இதனால் பல் கூச்சம் ஏற்படும்.
📌உங்கள் வாய்க்குள் செல்லும் அனைத்துமே முதலில் உங்கள் பற்களைப் பாதிக்கின்றது. அதிக அளவு இனிப்பு மற்றும் ஓட்டும் உணவுகள், அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள், கோலா போன்ற காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகள் போன்றவை பற்களில் உள்ள எனாமலின் எண்ணிக்கையை குறைத்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்.
📌ஈறு நோய் அல்லது வீக்கத்தால் ஈறுகள் பலவீனமடைகின்றன. பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படும் போது, வேர் மற்றும் நரம்புகளானது வெளியே தெரிவது பல் கூச்சத்தை அதிகரிக்கும்.
பல் கூச்சம் காரணம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்