பல்வேறு மோசடியுடன் தொடர்புடையவர் கைது
நீர்கொழும்பு கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் பல்வேறு மோசடியுடன் தொடர்புடைய நபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்புப் பொலிஸ் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள், போலி ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வைத்திருந்த 60 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போலியான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட்கள் போலி ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் ,போலி வெளிநாட்டு விசாக்கள், போலி ஆவணங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள, 1.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரூ. 26.5 மில்லியன் ரொக்கப் பணம் என்பன இவரிடமிருந்து மீட்கப்படன.
கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம)ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.