பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பரகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.