பல்பொருள் விற்பனை கடை தீயில் எரிந்ததால் பாரிய சேதம்!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றையதினம் இரவு பல்பொருள் விற்பனை கடையின் உட்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் என்பன சேதமாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்றையதினம் காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்தபோது கடையின் உட்பகுதி முழுவதும் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார்

அதன் பின் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டினை மருதங்கேணி பொலிசாரிடம் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.