பல்கலை மாணவிகளின் நிர்வாண காணொளிகளை பதிவு செய்த இளைஞன் கைது

கொழும்பில் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்ததாக கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலபனையில் பேக்கரி கடையொன்றை நடத்தி செல்லும் 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் குளியறையில் கையடக்கத்தொலைபேசி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து மாணவி இது தொடர்பில் விடுதியின் பெண் உரிமையாளரிடம் விசாரித்ததுடன் சந்தேக நபரான உரிமையாளரின் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்