
பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு : 2 மாணவர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் – கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் 11,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் திடீர் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
