
பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி பிரயோகம் : 14 பேர் பலி
செக் குடியரசின் ப்ரக் (Prague) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்குள் பிரவேசித்த சந்தேகநபர்இ துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகள் தொடர்வதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
