பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

2024/2025 கல்வியாண்டிற்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பம் கோரல் 2025 மே 30ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், சாத்தியமான அனைத்து மாணவர்களும் தங்கள் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அதற்கமைய, www.ugc.ac.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.